2024 மே 08, புதன்கிழமை

வாந்திபேதியால் செப்டெம்பருக்குள் 300,000 பேர் பாதிக்கப்படும் அபாயம்

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், வாந்திபேதி தொடர்ச்சியாகப் பரவிவரும் நிலையில், இவ்வாண்டு செப்டெம்பருக்குள், 300,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் சிறுவர் முகவராண்மையான யுனிசெப் தெரிவித்துள்ளது. தற்போது, காணப்படும் 193,000 பேருடன் ஒப்பிடும் போது, 300,000 பேர் என்பது, சடுதியான அதிகரிப்பாகும்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த யுனிசெப் பேச்சாளர் மெரிற்ஸெல், “ஓகஸ்ட் முடிவில், 300,000 வாந்திபேதி நோயாளர்களை நாம் அநேகமாக எட்டுவோம். வாந்திபேதி நோயாளர்களின் எண்ணிக்கை, தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

வாந்திபேதியின் பரவல் காரணமாக, சிறுவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரில் அரைவாசியானோர், சிறுவர்கள் எனவும் தெரிவித்தார். ஆனால், இதுவரை இறந்துள்ளோரில் கால்வாசிப் பேர் மாத்திரமே, சிறுவர்களாவர்.

வாந்திபேதி என்பது, பக்டீரியாத் தொற்றின் காரணமாக ஏற்படும் நோய்நிலைமை ஆகும். இது, நஞ்சாகிய உணவு அல்லது தண்ணீர் மூலம் பரவுகிறது. வாந்திபேதி நோய்க்கான சிகிச்சையை வழங்குவது, ஒப்பீட்டளவில் இலகுவானது என்ற போதிலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், இதைக் கட்டுப்படுத்துவது தான், சவாலாக அமைந்துள்ளது.

ஷியா முஸ்லிம் பிரிவான ஹூதிகளுக்கும் அரச படைகளுக்குமிடையிலான 2 ஆண்டுகால மோதல் காரணமாக, இதுவரையில் சுமார் 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 45,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சுமார் 5,000 பேர், பொதுமக்கள் என்பதோடு, காயமடைந்தோரில் 8,500 பேர், பொதுமக்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X