2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெனிசுவேலா மீது புதிய தடைகள்?

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெனிசுவேலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்நாடு மீது தடைகளை விதிப்பதற்கு, பல நாடுகள் சிந்தித்து வருகின்றன. இதனால், ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, மேலும் தனிமைப்படுத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.

23 மாநிலங்களுக்கான ஆளுநர்களைத் தெரிவுசெய்வதற்கு நடைபெற்ற இத்தேர்தல்களில், எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி கிடைக்குமென, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கருத்துக்கணிப்புகள், அதையே தெரிவித்தன.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, 17 மாநிலங்களில், ஆளுங்கட்சி வென்றது.

இதைத் தொடர்ந்து, தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி மதுரோ மீது தடைகளை விதிப்பதற்குச் சிந்தித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம இராஜதந்திரியான ஃபெடெரிக்கா மொகெரினி, இந்த முடிவுகளை ஆச்சரியந்தரும் முடிவுகள் என வர்ணித்ததோடு, என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டிய தேவையுள்ளது எனத் தெரிவித்தார்.

தனியாக அறிக்கையொன்றை வெளியிட்ட பிரான்ஸ், இத்தேர்தலில், பாரதூரமான முறைகேடுகள் இடம்பெற்றன என எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, கவலையடைவதாகத் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .