2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்படுவார்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சிவாணி ஸ்ரீ

ஓலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க சப்ரகமுவ மாகாண சபையின் விளையாட்டுத்துறை ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று, இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள “கேத்துமதி” ஹொட்டல் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கௌரவிப்பு நிகழ்வில் XLIII ஆவது தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்தில் 47 தங்கப் பதக்கத்தைப் பெற்ற வீரர்களும் 55 வெள்ளி பதக்கத்தைப் பெற்ற வீரர்களும் 77 வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற வீரர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.

மேற்படி தங்கம் மற்றும் வெள்ளி, வெங்கள பதங்கங்களை பெற்ற வீரர்களுக்கு அவர்களின் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்காக சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் அவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தங்க பதங்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு தலா 100,000 ரூபாயும் வெள்ளிப் பதங்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வெண்கலப் பதங்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து கருத்து தெரிவித்த நிலுக்கா ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த சுசந்திகா ஜயசிங்க சப்ரகமுவ மாகாணத்துக்கும் இலங்கை நாட்டுக்கும் விளையாட்டுத்துறையின் மூலம் கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். இவரின் விளையாட்டுத் திறமைகளை எதிர்கால சந்ததிக்கு பெற்று கொடுக்கும் நோக்கில் இவர் சப்ரகமுவ மாகாண சபையின் விளையாட்டுத்துறை ஆலோசகராக நியமிக்கப்படுவார்” என்று கூறினார்.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ஹேரத் பி. குலரத்ன, விளையாட்டு வீரர் சுசந்திகா ஜயசிங்க, சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தேவப்பிரிய விஜயராஜா, மாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் டி.எம். மாலணி, சப்ரகமுவ மாகாண சபை செயலாளர் பி.எஸ்.ஆர்.எம். விஜயராஜா, மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் தம்மிகா உட்பட முக்கிய அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .