2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது தெல்லிப்பழை மகாஜனா

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன், ஏ.ஆர்.எம். றிபாஸ்

தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.

அநுராதபுர சிறைச்சாளை மைதானத்தில் இன்று இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், கொழும்பு கந்தானை டி மெஸினோட் கல்லூரியை வீழ்த்தியே தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.

நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், கண்டி மாவனல்ல படுறியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் தொடர்ந்து அன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியை பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்றே இறுதிப் போட்டிக்குள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி நுழைந்திருந்தது.

இந்நிலையில், இறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், சம்பியனைத் தீர்மானிக்க பெனால்டி நாடப்பட்டு அதில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, 3-2 என்ற ரீதியில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் நாயகனகாக மகாஜனா கல்லூரியின் அணித்தலைவர் வ. ஜக்சனும் தொடரின் நாயகனாக உபதலைவர் ச. கனுஜனும் தெரிவாகினர்.

தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 1978ஆம் ஆண்டு சிங்கர் வெற்றிக் கிண்ணத்தை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி பெற்றிருந்த நிலையில், 40 ஆண்டுகள் கழித்து தற்போது, தேசிய மட்ட வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மகாஜனாக் கல்லூரி அணியின் பொறுப்பாசிரியராக இ. திலீபன், பயிற்றுவிப்பாளர்களாக து. மோகனதாஸ், ச. செந்தூரன், மேலதிக பயிற்றுவிப்பாளர்களாக ச. ஜபாகர், தி. புருசோத்தமன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.

இதேவேளை, இத்தொடரில் இன்று இடம்பெற்ற மூன்றாமிடத்துக்கான போட்டியில், இளவாலை புனித ஹென்றியரசர் பாடசாலையை பெனால்டியில் 4-1 என்ற ரீதியில் வென்ற கிண்ணியா மத்திய கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .