2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

10000 பாண் துண்டுகள் மூலம் மோனலிஸா ஓவியம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை பத்தாயிரம் பாண் துண்டுகள் மற்றும் சொக்லேற்றை பயன்படுத்தி மிகப் பெரிய அளவில் மீளுருவாக்கியுள்ளார் பிரித்தானிய ஓவியரான லோரா ஹாட்லன்ட் எனும் பெண்.

28 வயதான லோரா ஹாட்லன்ட், இத்தாலி, மெடரா நகரில் ஒரு டசன் உதவியாளர்களுடன் இணைந்து இதனை  உருவாக்கியுள்ளார்.

10000 துண்டு பாண்களையும் சொக்லட்டுக்களையும் லியானார்டோ டாவின்சியின் பிரபல மோனாலிசா ஓவியத்தை மீளுருவாக்குவதற்காக அவர் பயன்படுத்தியுள்ளார்.

140 இறாத்தல் சொக்லேற், 150 இறாத்தல் சீனி மூலம் இந்த ஓவியம் வர்ணமூட்டப்பட்டுள்ளது.  

இதை, பாண் துண்டுகள் மூலம் வரையப்பட்ட உலகின் மிகப் பெரிய ஓவியமாக அங்கீகரிக்குமாறு கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களிடம்  ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

இதற்குமுன் லோரா தனது மாமியாரின் உருப்படத்தை 9,852 பாண் துண்டுகளை பயன்படுத்தி தயாரித்திருந்தார். இதுவே இதுவரை பாண் துண்டுகள் மூலம் வரையப்பட்ட மிகப் பெரிய ஓவியமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

'நான் நூதனசாலையில் அதிகமான நேரத்தை செலவிட்டுருக்கின்றேன். அதனால் அங்குள்ள பொருட்களில் ஒன்றை எனது விருப்பத்திற்குரிய உணவைக் கொண்டு நவீனமாக உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது' என்கிறார் லோரா.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .