2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகின் மிக நீளமான பாலம்

Kogilavani   / 2011 ஜூன் 30 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

ஜெய்சோஹு பாய் என்று அழைக்கப்படும் இப்பாலம் சுமார் 26 மைல்கள் நீளமானதாகும். இப்பாலம் சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் விமான நிலையம் அமையப்பெற்ற இடமான கொங்டோ தீவு, ஹங்டோவுடன் வரை செல்கிறது.

உள்நாட்டு ஊடகமான சீசீ தொலைக்காட்சி இதுதொடர்பில் தெரிவிக்கையில், 110 அடி அகலத்தையுடைய இப்பாலத்தை அமைப்பதற்காக 10 பில்லியன் யுவான் (1.5பில்லியன்) செலவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

இப்பாலத்தை நிர்மாணிப்பதற்காக நான்கு வருடங்கள் தேவைப்பட்டதாகவும் இதன் கட்டுமானப் பணிகணிகளில் சுமார் 5000 ஊழியர்கள்  ஈடுபட்டதாகவும் அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இப்பாலம், ஏலவே உலகில் மிக நீளமான பாலமாக இருந்து கின்னஸ் சாதனை படைத்த லொஹ்ஸினியாவில் அமைந்துள்ள  பாலத்தின் சாதனையை முறியடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Harry Friday, 01 July 2011 07:45 PM

    இந்த நாட்டின் வளர்ச்சி நீண்டுகொண்டு போவது இதில் இருந்து புலப்படுகின்றது. நாமும் இதுபோல் வளர முயற்சிக்க வேண்டும்.

    Reply : 0       0

    risimb Saturday, 02 July 2011 03:38 AM

    paalathai parthal makilchi. sunami vanthal ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .