2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

331,038 மின் விளக்குகளால் அலங்காரம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 21 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காதல் ஜோடியொன்று 331,038  அலங்கார மின்விளக்குகளை மூலம் தனது வீட்டை அலங்கரித்து புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த  டேவிட் ரிச்சரட்ஸ் - ஜானியன் ரிச்சர்ட்ஸ் என்ற ஜோடியே இச்சாதனையை நிலைநாட்டியுள்ளது.

3 பிள்ளைகளைக் கொண்ட ரிச்சர்ட்ஸ், கடந்த 4 வருடங்களாக முயற்சித்து அலங்காரத்தை மேற்கொண்டுள்ளார்.

இது வெறுமனே அலங்கார நடவடிக்கையல்ல.  இந்த ஒளியூட்டுதல் மூலம், சிறுவர்களுக்கான தொண்டு நிறுவனமொன்றுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.

ரிச்சரட்ஸ் இதுக் குறித்து தெரிவிக்கையில், 2002   இல் தனது வாழ்க்கையின் கடினமான காலப்பகுதியில் தனது குடும்பத்துக்கு அந்நிறுவனம் உதவியதென தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினனும் அவர்கள் கின்னஸ் சாதனையில் உள்நுழைந்துள்ளதுடன் அதனூடாக பெற்றுக்கொள்ளும் பணத்தை சிறுவர் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கவுள்ளனர்.

இதேவேளை அடுத்த வருடம் இதே திட்டத்தை அவர் மேற்கொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ளனர்.
தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதற்கு ஊப்புவிப்பாக இந்த விசித்திர விளக்குகள் அமையும்.


You May Also Like

  Comments - 0

  • iraasan Tuesday, 03 January 2012 10:28 PM

    யோவ் நானும் அவுஸ்திரேலியாவில் தான் வாழ்கிறேன், இவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கே இதை செய்தார்கள் என்பதை எப்படியோ இந்த எழுத்தாளர் எழுத தவறிவிட்டார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .