2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘1,500 சராசரியாயின் சுகாதாரதுறை சரியும்’

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சராசரியாக 1,500 ஆகக் காணப்படுமாயின் சுகாதாரத்துறை சரிவை சந்திக்கும் என பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

“ஆகக் குறைந்தது 7 நாள்களுக்காவது நாட்டை முடக்கினால் மாத்திரமே தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டை முடக்குமாறு மூன்று தடவைகள் கோரியதாகவும்  இது தொடர்பில் இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடியபோது, நாட்டை முடக்கினால், நாளாந்த வருமானத்தைப் பெறும் 60 சதவீதமான மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

அத்துடன்,  தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்படும் பிரதேசங்களை முன்னறிவிப்பின்றி முடக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளேன் என இராணுவத் தளபதி ​தெரிவித்தார் என தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

நாட்டை முடக்குவது தொடர்பில், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சிறந்தொரு தீர்மானத்தை எடுப்பார் என தலைவர் உபுல் ரோஹன நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டில் நாளொன்றுக்கு அண்ணளவாக 1,500 ​தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இந்நிலையில், இந்த எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதே நிலைமை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு  நிலைமை நீடித்தால், சுகாதாரத்துறை சரிவை சந்திக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .