2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’10,000 மீனவர்களுடன் இந்தியாவுக்குச் செல்வேன்’

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுமெனவும், இந்திய மீனவர்களின் பேச்சு வார்த்தை வருவது போவதாக உள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என்றார்.

இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இருந்தாலும் அது நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க  முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.

பத்தாயிரம் கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள கடற்தொழிலாளர்களுடனும் ஆட்சியாளர்களுடனும் கதைப்பதாக நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருந்தேன்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .