2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘BMW கார் தனது உறவினருடையது’

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 19 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவத்துகொட பகுதியில் விபத்துக்குள்ளான பீ.எம்.டபிள்யு காரானது தனது உறவினருடையது என்ற போதிலும், அமைச்சுக்கும், குறித்த காருக்கும் தொடர்பு இல்லையென, உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் வலைத்தளத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த காரின் உரிமையாளருக்கும், அமைச்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், குறித்த உறவினர் அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புப்படாதவர் என்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு தான் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும், அவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .