2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமைச்சர் கிரியெல்லவின் அலுவலகப் பணியாளர்கள் மூவருக்கு பிணை

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின்  பெயரைக் குறிப்பிட்டு, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், 639 கடிதங்களுடன் மே மாதம் 2ஆம் திகதி கொழும்பு மத்திய தபால் திணைக்களத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை 6 இல் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிபதி ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வழக்கை செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .