2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரசமைப்புத் தொடர்பான அறிக்கை: ‘மகாநாயக்க தேரர்களின் முழு ஆசீர்வாதம் உண்டு’

Kogilavani   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்போ அல்லது அரசமைப்புக்கான திருத்தமோ தேவைப்படவில்லை என, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த சபையான கரக மகா சங்க சபையால் எடுக்கப்பட்ட முடிவுக்கு, மல்வத்த, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் முழுமையான ஆசீர்வாதம் உண்டு என, அஸ்கிரிய பீடத்தின் பிரதம செயலாளர் வண. மடகம ஸ்ரீ தம்மானந்த தேரர், நேற்று (19) தெரிவித்தார். 

கரக மகா சங்கத்தின் முடிவுவைப் பற்றிச் சட்டை செய்யாமல், இந்த அரசமைப்புப் பணிகளைத் தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு, அரசாங்கம் முயலுமாயின், அதற்கெதிராக மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களின் எதிர்ப்பை உருவாக்கவும், மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர் மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  

இச்செயற்பாட்டை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்குமாயின், இது தொடர்பான இறுதி முடிவு, ஆழமான ஆய்வுக்குப் பின்னரும் மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அனுமதியுடனும் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.  

கரக மகா சங்கத்தால், நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு அல்லது அரசமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முடிவெடுக்குமாயின், அது தொடர்பாக நாங்கள் ஆழமாக அவதானிப்போம்” என்று தெரிவித்தார்.  

தொடர்ந்து தெரிவித்த அவர், மகா சங்கத்தினர், அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும், புதிய அரசமைப்புக்கே எதிராக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.  

“புதிய அரசமைப்பு மீதோ அல்லது அதை வடிவமைத்துக் கொண்டிருப்பவர்கள் மீதோ, எமக்கு நம்பிக்கையில்லை. எங்களது எதிர்ப்புக்கு மத்தியிலும், இந்த வடிவமைப்பைத் தொடர்வார்களாயின், அந்த முயற்சிகளை நாங்கள் எதிர்ப்போம். அரசமைப்பையே நாங்கள் எதிர்க்கிறோம், அரசாங்கத்தை அல்ல” என்றார்.  

அரசமைப்புக்கு எதிராக, நாடு முழுவதிலும் எதிர்ப்புப் பிரசார நடவடிக்கைகளை, சங்கத்தின் மூன்று பீடங்களும் முன்னெடுக்கும் எனத் தெரிவித்த அவர், இவ்விடயம் சம்பந்தமாக, ஜனாதிபதியுடனும் பிரதமருடன், கலந்துரையாடுவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .