2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரிசிக்கு கட்டுபாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வருடம் முதல் அரிசிக்கு கட்டுபாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

சந்தையில் அரிசிக்கு நிகரான விலையை பேணும்  நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அரிசிக்கு சந்தையில் தற்போது இருக்கின்ற விலையை விட 10 ரூபாயை குறைக்க, ஆலை உரிமையாளர்கள் ஒப்பு கொண்டுள்ளதாகவும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்தோடு, அடுத்த மாதம் முதல் பி.எம்.பீ அரிசி வகையை விற்பனை செய்ய நெல் விநியோக சபை திட்டமிட்டுள்ளதோடு, சதொச மற்றும் சந்தைகளின் ஊடாக அதனை விநியோகிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .