2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அர்ஜுனவை சந்தித்த அர்​ஜுன

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி உலக கிண்ணத்தை சுவீகரித்த தினத்தில் பிறந்த யானையான அர்ஜுனவை இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், உலகக் கிண்ணத்தை வென்றுக்கொடுத்த தலைவருமான  அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று (21) கதிர்காமத்தில் சந்தித்துள்ளார்.

உலக கிண்ணத்தை அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கை அணி வென்றதால், அவரை கௌரவப்படுத்தும் வகையில் அன்றைய தினம் பிறந்த யானைக்குட்டிக்கு அர்ஜுனவென பெயர் சூட்டப்பட்டது.

குறித்த யானையை இதுவரை கண்டிராத அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முதற் தடவையாக நேற்று கதிர்காமத்தில் வைத்து சந்தித்துள்ளமை விசேட அம்சமாகும்.

குறித்த அர்ஜுன என்ற யானையானது திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் வளர்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .