2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: மூவர் அடங்கிய குழு நியமனம்

Gavitha   / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால், மூவர் அடங்கியக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயரதிகாரிகளைக் கொண்ட சிரேஷ்ட குழு, கடற்றொழில் அமைச்சு திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற்படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டிய செயற்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கானப் பரந்துரைகளை, கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கவுள்ளது.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகளால், இலங்கை கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன், இலங்கையின் கடல் வளமும் அழிவடைந்து வருகின்றது என்றும் இதனால், குறித்த சட்ட விரோதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே, இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .