2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்புளுவன்சா வைரஸால் மற்றுமொரு குழந்​தை பலி

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மற்றுமொரு குழந்தை உயிரிழந்துள்ளதென,காலி- கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வயதும் 2 மாதங்களும் பூர்த்தியடைந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தை கொனபினுவல பகுதியைச் சேர்ந்ததென, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதயத்தில் ஏற்பட்ட நோயினால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

கடந்த மே மாதம் தொடக்கம் ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், வைரஸ் காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தோரில், 20 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக காணப்பட்ட குழந்தைகளே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் வைரஸ் காய்ச்சலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பணிப்பாளர், ​ வைத்தியர் ஜயம்பதி சேனாநாயக்க, வைரஸ் தொற்றுக்கு இலக்காகி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையின் சிறுவர்களுக்கான சிகிச்சைப் பிரிவில், காய்ச்சல் காரணமாக 12 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இவர்களில் இன்புளுவன்சா  A தொற்றுக்கு இலக்கான 2 சிறுவர்கள் மாத்திரமே, சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .