2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான தீர்வை அதிகரிக்கப்படவுள்ளது

Editorial   / 2019 மே 19 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான தீர்வையை , அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோகிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் தீர்வை  அறவிடப்படும் நிலையில், இத்தீர்வை 40 ரூபாயாக அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

​உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .