2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையின் மின் பிரச்சினைக்கு பிரித்தானியா உதவிக்கரம்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படவுள்ள மின் நெருக்கடிக்குத் தீர்வாக, அகற்றப்படும் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் முறையொன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்த பிரித்தானியா பிரதி உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ், இது தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தமது காரணங்களைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் ஊடாக, அதிகரித்துச் செல்லும் மின் கேள்விக்கு சிறந்த தீர்வாக அமையும் என்றும் பிரித்தானியர் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .