2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இலஞ்ச’ ஓ.ஐ.சிக்கு 28 ஆண்டு சிறை

Editorial   / 2017 ஜூன் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சிலாபம் புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு (ஓ.ஐ.சி) 28 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், நேற்று (28) இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அந்த நபர், காணாமல் போயுள்ள நபரை தேடித்தருவதாக கூறியே, அவரின் உறவினர்களிடம் மூன்றரை இலட்சம் ரூபாயை இலஞ்சமாக கோரி, அதனை பெற்றுக்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.   

இந்த வழக்கின் பிரதிவாதியான ஓ.ஐ.சி மீது எட்டுக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அதில், நான்கு குற்றச்சாட்டுகளை, நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி நீதிபதி, சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 5 இலட்சம் ரூபாய் தண்டமும் விதித்தார்.  

2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03ஆம் திகதிவரையிலான காலப்பகுதியிலேயே அவர், இலஞ்சமாக இந்தப் பணத்தை வாங்கிக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .