2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’உடன் நிவாரணம் வழங்கவும்’

Editorial   / 2018 மே 21 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவிவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைக​ளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், பதுளையிலுள்ள ஊவா மாகாணசபைக் கேட்போர் கூடத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (21) இடம்பெற்றது. இதன்போதே, இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன்போது, நாட்டில் தொடர்ந்து நீடித்த வரட்சியான காலநிலை, ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், போதியளவு மழைவீழ்ச்சி கிட்டியுள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த மழை நீரை, முறையான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி, விவசாயத்துக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .