2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உழியர்களுக்கான கொடுப்பனவுக்கு குறை நிரப்பு பிரேரணை

Editorial   / 2020 ஜனவரி 29 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட மூடிய கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய காரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான குறை நிரப்பு பிரேரணை ஒன்று நாடாளுமன்றில்  சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படுவதினால் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே இவற்றை செலுத்துவதில் தமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த குறை நிரப்பு பிரேரணையை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 8 சதவீத வற் வரி நிவாரணத்தினால் சுமார் 50 நிறுவனங்களுக்கு உட்பட்ட 5555 பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டிப்பதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கான எதி திசி கடன் முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு இந்த கடன் வசதி கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .