2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, எதிர்வரும் நாட்களின் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் விலை சூத்திரத்துக்கமைய, மாதம்  ஒரு முறை எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த 10 ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்போது, எரிபொருள் விலையானது அதிகரிப்பை தவிற ஒரு போதும் விலை குறைப்பு மேற்கொள்ளப்படமாட்டாதென, பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின்  பொருளியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பிரியங்க தனுசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதனால், எரிபொருள் விலை மாத்திரமல்லாது, போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும் நிலை காணப்படவதை அவதானிக்க முடிகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதானது, இலங்கையின் முதலீடுகளுக்கு சாதகமான காரணியாக விளங்காதெனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .