2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஓட்டோக்களின் கட்டுப்பாட்டுக்கு புதியதோர் அதிகார சபை’

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டோக்களின் கட்டுப்பாட்டுக்கு புதியதோர் அதிகார சபையை நிறுவுவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அதனடிப்படையில், வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையை எதிர்காலத்தில் அதிகார சபையாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ராகமை நகரை ஓட்டோ கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கும் நிகழ்வில் இன்று (21) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஓட்டோ கட்டுபாட்டு வலயத்தை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் முதன் முதலில் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், ராகமையின் இரண்டாவது நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் கீழ் ராகமை நகரிலுள்ள ஓட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வூதிய முறையொன்றை அறிமுகம் செய்தல், 25 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஓட்டோ சாரதியாகச் செயற்பட்டவர்களைக் கௌரவித்தல் , ராகமை பகுதியிலுள்ள மூத்த ஓட்டோ சாரதியைக் கௌரவித்தல் ஆகியன நடைப்பெற்றன. 

விசேடமாக இந்நிகழ்வின் போது, 50 ஓட்டோ சாரதிகளுக்கு சுற்றுலாத்துறை அனுமதிபத்திரமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர், ஓட்டோ கட்டுப்பாடு யாதெனில் அத்துறையைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டு, சட்டங்களை இயற்றுவதல்ல என்றார்.

ஓட்டோ கட்டுப்பாடானது ஓட்டோ சங்கத்தால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகுமென சுட்டிக்காட்டிய அமைச்சர்,  இத்துறையை மென்மேலும் முன்நோக்கி நகர்த்துவதற்கு இத்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். 

எனவே, வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபையை எதிர்காலத்தில் அதிகார சபையாக மாற்றுவதற்குத் தான் எண்ணியுள்ளதாகவும் இன்னும் ஓர், இரு மாதங்களில் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை  நிறைவுசெய்வேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .