2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கண்டியில் பறித்து மாத்தறைக்கு கொடுப்பதற்கு கடும் பிரயத்தனம்

A.Kanagaraj   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தைச் ​சேர்ந்த அமைச்சரொருவரின் அமைச்சுப் பதவியைப் பறித்து, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரொருவருக்குக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செயற்பாட்டுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளாரெனவும், ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

அதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், அந்தக் கட்சிக்குள் பனிப்போர் மூண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கண்டி மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் விடயதானத்தையே இவ்வாறு மாற்றிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறியமுடிகின்றது.

அதில், மாத்தறையைச் சேர்ந்த சட்டம், ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளாரென, கடந்த14ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.

அவருக்கே, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்லவிடமிருந்து, நெடுஞ்சாலைகள் அமைச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்தச் செயற்பாடுகளுக்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனரென, அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .