2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா தொற்றாளர்களுக்குக் கொரோனா வருமா?

Nirosh   / 2021 மே 18 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துக்கு குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கும் சுகாதார சேவை பிரதிப் பணிப்பளார் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், தொற்றுக்குள்ளானவர்கள் 14 நாள்களுக்குப் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது அவசியமெனவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் வராதென பலரும் கூறுகிறார்கள். ஒருவகையில் இது உண்மையானக் கருத்தெனவும் தெரிவித்த அவர், ​கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் பின்னர் மீண்டும் அந்த வைரஸ் தொற்றை ​எதிர்க்கொள்வதற்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகுமெனவும் தெரிவித்தார்.

எனினும் ஆரம்பத்தில் உருவாகும் இந்த நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவுக் காலத்துக்கு இருக்குமென உறுதியாகக் கூறமுடியாதெனவும் தெரிவித்த அவர், எனவே தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்து சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

குறிப்பாக தொற்றாளர்கள் 14 நாள்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸூக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது முக்கியமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .