2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கரு மறுத்துவிட்டார்; ஜே.வி.பி புறக்கணிப்பு

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்குத் தீர்வொன்றை காணும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை (18) நடத்தப்பட்டது.   

அதற்கான அழைப்பு, சகல கட்சிகளின் தலைவர்களுக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், சனிக்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், அந்தக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்கமுடியாதென, சபாநாயகர் கருஜயசூரிய, நேற்று (18) முற்பகல் அறிவித்துள்ளார். 

ஜனாதிபதியுடன் ​தொலைபேசியில் தொடர்புகொண்ட சபாநாயகர் கருஜயசூரிய, தன்னால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாதென, அறிவித்துள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்களும், சபாநாயகர் காரியாலயத் தகவல்களும் தெரிவித்தன. 

இதேவேளை, சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜே.வி.பியும் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, நேற்றுக்காலை அறிவித்திருந்தார்.  

நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த அமைதியின்மை மற்றும் மோதல்கள் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒரு முறைமையின் கீழ் நடத்துவதற்காக, சகல கட்சிகளின் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலேயே, இந்த சர்வ கட்சி தலைவர்களுக்கான கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதென, ஜனாதிபதி செயலகம் விடுத்திருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .