2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோவாக்ஸ் திட்டத்திலிருந்து இலங்கைக்கு முதலாவது தொகுதி

Editorial   / 2021 மார்ச் 08 , மு.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவாக்ஸ் திட்டத்திலிருந்து இலங்கைக்கு முதலாவது தொகுதி கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்று (07) கிடைக்கப்பெற்றுள்ளன. 

'கொவிட்-19 தடுப்பூசிகளின் சமமானதும் நியாயமானதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்கான எமது இலக்கின் மற்றொரு படியை இது குறிக்கிறது. பாரதத்திலிருந்து 20 நாடுகளுக்கு 20 மில்லியன் கோவாக்ஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இது அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளைச் சமமாகப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கான உலகளாவிய பலதரப்பு முயற்சியாகும் எனத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தொற்று நோயிலிருந்து உலகளாவிய சுகாதாரம், பொருளாதார மீட்சிக்கான முக்கிய நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

இன்று (நேற்று) கிடைக்கப்பெற்ற 264,000 தடுப்பூசிகள் முதலாவது தொகுதியின் ஒரு பகுதி என்பதுடன், மே மாதத்துக்குள் 1,440,000 தடுப்பூசிகள் கிடைக்கும்.  இலங்கை சனத்தொகையில் 20 சதவீதமானோரின் தேவையை இவை பூர்த்திசெய்யும். இந்த ஆண்டின் அரையாண்டு பகுதியில் மேலதிக தடுப்பூசிகள் கிடைக்கும். இவையாவும் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டவை. இவை, எவ்விதமான செலவீனங்களும் இன்றி இலங்கைக்கு வழங்கப்படுகின்றன என அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .