2024 மே 14, செவ்வாய்க்கிழமை

காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு பிணை

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி அலுவலக சபையின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு இன்று(21) பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

தலா 50,000 ரூபா ரொக்கப்பிணையிலும்,10 இலட்ச ரூபா சரீரப் பிணை இரண்டிலும் இவர்களை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன்,இவர்களது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 4 பி;ல்லியன் நிதியினை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காமினி செனரத் மற்றும் கூட்டுதாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் பியதாச குடாபாலகே மற்றும் நீல் ஹபுஹின்ன உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர்கள் கடந்த 13ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜராகிய போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .