2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கால அவகாசம் தேவை’

Editorial   / 2019 பெப்ரவரி 16 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு அவகாசம் தேவை எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச கண்காணிப்புக்கான கால நீடிப்பாகவே இது கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாதம் அமர்வுக்கு முன்னர், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நேற்று (15) கூறியுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த விடயத்தை காலவிரயம் என எண்ணவில்லை என்றும் மாறாக சர்வதேச கண்காணிப்புக்கான காலம் என்றே கருதுவதாகவும் கூறினார்.

மேலும் பிரித்தானியாவின் முக்கிய நகர்வுகளுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .