2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

‘கிழக்கை மு.கா கைப்பற்றும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:30 - 2     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எம்.அஹமட் அனாம்  

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் யாரும், எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையைக் கேட்காமல் பதவி துறந்தார்” என்று, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதுடன் மட்டுமன்றி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை உள்ளுராட்சி தேர்தலில் கைப்பற்றும்” என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அபிவிருத்தியை நோக்கிய மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய அரசியல் அதிகாரம் என்பது, கடந்த கால ஆட்சிகளிலே பெரும் போடுகாய்களாக எங்களுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்கு, நாங்கள் போய் ஒரு சரணாகதி அரசியல் செய்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்ட காலங்களில் வருகின்ற போது, கட்சி போராளிகள் தைரியமாக இருக்கின்றார்கள் என்றே வந்தோம்.  

கல்குடா, காத்தான்குடியில் தாங்கள் அபிவிருத்தி செய்தோம் எனக் கூறும் அமைச்சர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை காட்டிக் கொடுத்து தான் அரசியல் செய்தார்கள். எனவே அதில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பங்கு உள்ளதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விரட்ட வேண்டும் என்றுதான் அந்த அந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இவற்றையெல்லாம் கொண்டு வந்தனர். கிழக்கு மாகாணத்தில் அரசியல் அந்தஸ்த்தில் உள்ள அனைவரும் முஸ்லிம் காங்கிரஸின் அறிமுகத்தில் வந்தனர். காங்கிரஸை ஒரு பிஸாசாகக் காட்டி, தங்கள் பிரதேசத்துக்கு அபிவிருத்தியைக் கொண்டு வருவதன் மூலம் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று பல விதமாக இந்த விடயங்களை செய்கின்றனர்.  

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) செய்த வேலைகளை தற்போதைய முதலமைச்சர் நசீர் அஹமட் செய்யவில்லை என்று சொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றை அவர்கள் மறந்து விடக் கூடாது.  

பிள்ளையான் முதலமைச்சராக வருவதற்கு முன்னர் முஸ்லிம் முதலமைச்சரை கொண்டு வருவோம் என்று காங்கிரஸுக்கு கடைசி நேரத்தில் கழுத்தறுத்துப் போன காத்தான்குடி அரசியல் பிரமுகருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு வந்த ஆட்சியில், கூடுதலாக முஸ்லிம் உறுப்பினர்களுடன் வந்தால் முதலமைச்சர் தருவேன் என்று, மஹிந்தவிடம் பொருத்தம் எடுத்து விட்டு போய் தான் அந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். இதனை முறியடிக்க எனது நாடாளுமன்ற ஆசனத்தை துறந்தேன்.  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்பதில் யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையை கேட்காமல் பதவி துறந்தார்.  

அந்த பெரிய சாகச வித்தைகள் எல்லாம் செய்து காட்டி, முதலமைச்சர் நசீர் அஹமட் கட்சிக்குள் நுழைந்த போது கட்சியை தோற்கடிக்க பல நாடகங்கள் நடாத்தினர். இன்னும் அந்த நாடகம் தொடர்கிறது.  

கல்குடாத் தொகுதியில் குடிநீரை அறிமுகம் செய்து வைக்கப் போகின்றோம் என்று பேசிய போது. அதனை ஏளனமாக பேசியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதியை ஏற்படுத்தி உள்ளோம்.  

அத்தோடு காத்தான்குடியில் தனியான பாரிய கழிவு நீர்த் தொகுதி ஒன்றை ஏறத்தாள பதினையாயிரம் மில்லியனுக்கு மேலான செலவில் அமைப்பதற்கு அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்து, அதற்கான ஒப்பந்தமும் ஓரிரு மாதங்களில் கைச்சாத்திடப்படவுள்ளது.  

மட்டக்களப்பு மவட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை முன்கொண்டு செல்வதில் கட்சிக்கு வெளியில் இருந்து வந்த பிரமுகர்களின் பங்களிப்பை மறந்து விடக் கூடாது. 

 


You May Also Like

  Comments - 2

  • பா.அரியநேத்திரன் Tuesday, 15 August 2017 07:14 AM

    தமிழ்தேசியகூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் அனைவரும் கிழக்குமாகாணசபை தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும் அப்படி வாக்களித்தால் ஆட்சியை நாம் கைப்பற்றமுடியும். வாக்குகளை சிதறடித்து பேரினவாதகட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களித்தால் அது வரலாற்று துரோகமாக்கும் அமைச்சர் ஹக்கீம் சொல்வதை ஆழமாக தமிழர்கள் சிந்திக்கவேண்டும் அவர் தமது ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பது தெரியும் ஆனால் தமிழர்களின் வாக்கு சிதறடிக்கும்பொது தாம் வெற்றியடையலாம் என்பதை வைத்துத்தான் கூறுகிறார். இதுதான் 2012,தேர்தலிலும் நடந்தது இம்முறை அந்த தவறை தமிழ்மக்கள் செய்யக்கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

    Reply : 0       0

    பா.அரியநேத்திரன் Tuesday, 15 August 2017 03:49 PM

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் அனைவரும் கிழக்குமாகாணசபை தேர்தலில் வாக்களிக்க முன்வரவேண்டும் அப்படி வாக்களித்தால் ஆட்சியை நாம் கைப்பற்றமுடியும். வாக்குகளை சிதறடித்து பேரினவாதகட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களித்தால் அது வரலாற்று துரோகமாக்கும் அமைச்சர் ஹக்கீம் சொல்வதை ஆழமாக தமிழர்கள் சிந்திக்கவேண்டும் அவர் தமது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பது தெரியும் ஆனால் தமிழர்களின் வாக்கு சிதறடிக்கும்பொது தாம் வெற்றியடையலாம் என்பதை வைத்துத்தான் கூறுகிறார். இதுதான் 2012,தேர்தலிலும் நடந்தது இம்முறை அந்த தவறை தமிழ்மக்கள் செய்யக்கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X