2024 மே 08, புதன்கிழமை

கொழும்பில் இன்று மூடப்படவுள்ள வீதிகள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 22 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் பிரதமர்  இலங்கைக்கான  விஜயத்தை மேற்கொண்டுள்ளதால், கொழும்பில் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 



 இதற்கமைய, கட்டுநாயக்க முதல் அதிவேக வீதி வரையான பேஸ்லைன் வீதி, பொரலை டி.எஸ் சுற்றுவட்டம், ஹோட்டன் பிரதேசம், தாமரைத் தடாகம், லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக காலி வீதி வரையான பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலை 04.30 தொடக்கம் 05.30 வரை, குறித்த வீதிகளில்  இவ்வாறு போக்குவரத்து மட்டுப்பாடுகள் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X