2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோட்டாபய உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து ஆராய்வதற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த நிஷாந்த விக்கிரமசிங்க, குறித்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இருந்த கபில சந்திரசேன ஆகியோரே, அழைப்பாணை விடுக்கப்பட்ட ஏனையோராவர்.
மேற்படி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதெனக் கூறப்படும் மோசடிச் செயற்பாடுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கே, இவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் பணிப்பாளராகப் பதவி வகித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இம்மாதம் 29 ஆம் திகதியும், சஜின் வாஸ் குணவர்தனவுக்கு 24 ஆம் திகதியும், கபில சந்திரசேனவுக்கு 23ஆம் திகதியும், ஆணைக்குழு முன்னிலையில் ஆஜாராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .