2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சமஷ்டி என்பது அரசியல்வாதிகளால் கெட்ட சொல்லாக்கப்பட்டுவிட்டது’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமஷ்டி என்பது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக, தீய சொல்லாக்கப்பட்டு விட்டது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

சமஷ்டி என்பதற்கு, பெரும்பான்மை மக்களிடத்தில் காணப்படும் எதிர்ப்புத் தொடர்பில் கேட்கப்பட்ட போது பதிலளித்த முதலமைச்சர் சி.வி, “என்னுடைய கொழும்பு நண்பர்களுக்கு, சமஷ்டியின் நன்மை பற்றித் தெரியும். கவலைப்படாதீர்கள். அவர்களை நான் சமாளித்துக் கொள்வேன்.   

“உண்மையான சமஷ்டி வழங்கப்பட்ட உடன், இந்த நாடு, செழிப்பு நோக்கி அதிவிரைவாகச் செல்லும்; பல்வேறு இனங்களுக்கு இடையிலான வெறுப்பும் சந்தேகமும் மறைந்துபோகும்; நல்லிணக்கமும் சமாதானமும் உருவாக்கப்படும்   

“வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி வழங்குவதென்பது, அவர்களுக்கு இழப்பானது என அவர்கள் எண்ணுவார்களாயின், நாடு முழுவதற்கும் சமஷ்டியை வழங்கி, ஒவ்வொரு மாகாணத்துக்கும், இன்னொரு மாகாணத்துடன் இணைகின்ற உரிமை உட்பட சமஷ்டி உரிமைகளை வழங்குவதற்குப் பரிந்துரைத்துப் பார்க்கவும்” என்று தெரிவித்தார்.   

சுவிற்ஸர்லாந்தில் இருக்கும் போது, சிறுபான்மையினரைப் பலப்படுத்துவதும் அவர்களுக்கு விசேட சலுகைகளையும் வழங்குவது பொறுப்பாகும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம், இலங்கைக்கு வந்தால், அரசியல் நலனுக்காக, சிறுபான்மையினர் மீது பாகுபாடு காட்டுவதே தமது கடமை போன்று, பெரும்பான்மையான சட்டவாக்கப் பிரிவினர் நடந்து கொள்கின்றனர் என, அவர் குற்றஞ்சாட்டினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .