2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பள அதிகரிப்புக்கு ஜே.வீ.பீ எதிர்ப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாயால் அதிகரிக்க, மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க எடுத்துள்ள தீர்மானத்துக்கு, மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேயரின் குறித்த யோசனை எதிர்வரும் பொதுக் கூட்டத்தின் போது தோற்கடிக்கப்படும் என, மக்கள் விடுதலை முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் ஹேமந்த வீரகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் 6 பேரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம்  மேற்குறிப்பிட்டவாறு அதிகரிக்கப்பட்டால், மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்துக்கு மேலதிகமாக, 1,428 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டி ஏற்படும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .