2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சாவற்காடு விவகாரம் : அறிக்கை வந்ததும் உண்மை வெளியாகும்’

Yuganthini   / 2017 ஜூன் 27 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சாவற்காட்டில் இளைஞர்களின் அட்டகாசம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை” என, வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இது தொடர்பில் பொலிஸாரிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் உண்மையை வெளிப்படுத்துவதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த மாதம் 31ஆம் திகதியன்று, யாழ். – காக்கைதீவு - சாவற்கட்டு சந்தியில், இளைஞர்களின் அட்டகாசம் மிகவும் தொல்லையாக இருக்கின்றது எனத் தெரிவித்து கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது.

“இவ்வாறான கடிதங்கள் கிடைக்கும் போது, அவற்றின் உண்மைத் தன்மையை அறிவதற்காக பொலிஸாரிடம் அக்கடிதத்தைப் பாரப்படுத்தி, விசாரணைக் கோருவது வழக்கமாகும்.

“இவ்விடயம் சம்பந்தமாகவும், அவ்வாறே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு, என்னால் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு பத்திரிகையில், ‘காக்கைதீவு, சாவற்காட்டு பகுதிகளில் பொலிஸ் காவலரண்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

“அந்தப் பத்திரிகைச் செய்தி, எம்மால் அனுப்பப்படவில்லை. ஒருவேளை, பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரிடம் இருந்து விவரங்களைப் பெற்று அவ்விபரங்களை பத்திரிகையில் பிரசுரித்திருக்கலாம். காவலரண் என்ற சொல் பிழையாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட செய்தியில் நடப்பதாகக் கூறும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் வேண்டுமென்றே யாரோ இவ்வாறான பொய் முறைப்பாட்டைத் செய்திருக்கிறார்கள் என்றும் அப்பிரதேச மக்கள், என்னை சந்தித்துக் கூறினர்.

“உண்மையில், எதுவும் அங்கு நடைபெறவில்லை என்றால், பொலிஸார் அது பற்றி எனக்கு அறிக்கை தருவார்கள் என்று கூறினேன். அத்துடன், நான் இது பற்றிய உண்மையை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்துவேன் என்றும் அதுவரை அவ்வூர் மக்கள் அனைவரும் சமாதானத்தைக் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்” என, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .