2024 மே 08, புதன்கிழமை

ட்ரம்ப்பின் ஜெருசலேம் முடிவை கண்டிக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், நேற்று (12) அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், இஸ்‌ரேல், பலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளுக்கான இணைந்த தலைநகராக ஜெருசலேம் காணப்படுகிறது என்ற, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தையே, தாம் கொண்டிரு ப்பதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சமாதானத்தைக் காண்பதற்கு விரும்பும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையாக இதுவே இருந்தது. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் இதுவே இருந்தது.

“ஐ.அமெரிக்க ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாற்றாக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன வெளியிட்ட அறிக்கையை நாம் வரவேற்கிறோம். இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரித்து, தற்போது காணப்படும் நிலைமையை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள்ளதோடு, பலஸ்தீனர்களின், பலஸ்தீன தேசம் என்ற வாய்ப்பு, மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஜெருசலேம் என்பது, ஒரு கடவுளின், இரண்டு மக்கள் தொகுதியின், மூன்று வெவ்வேறான நம்பிக்கைகளின் இடம் என, அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு, இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் காணப்படும் வித்தியாசத்தை, மேலும் அதிகரிக்கிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர், விட்டுக்கொடுப்பு உணர்வுகளின் அடிப்படையில், பலஸ்தீன மக்களுடன் பேரம்பேசல்களுடன் ஈடுபடுவதற்கு, இஸ்‌ரேலை அது ஊக்குவிக்காது என்றும் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பென்பது, ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு முரணானது என்பதோடு மாத்திரமல்லாது, ஜெருசலேத்தின் நிலையையும் பண்பையும் மாற்றுவதற்கான ஒன்றாக அமையும் என்பதோடு, பிராந்தியத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் பாதிக்குமெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X