2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் மார்ச் மாதம் ஆரம்பம்

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள்  மார்ச் மாதத்திலிருந்த ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தென்னாசியாவின் இரண்டாவது உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரம் 350 மீற்றர் உயரத்திலும் 10 ஹெக்டயர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகளுக்காக 104 மில்லியன் ​அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதுடன், இதில் 80 சதவீதமான நிதி சீனாவின் எக்ஸீம் வங்கியால் செலுத்தப்படுகின்றது.

தற்போது தாமரைக் கோபுரத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருவதாக, இத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

விடுதிகள், தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலைகள், பல்பொருள் அங்காடிகள், ​ஹோட்டல்கள், கேட்போர் கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், வரவேற்பு மண்டபங்கள் என இக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோபுரத்துக்குள் உள்நுழைவதற்காக 4 பிரதான வாயில்கள் காணப்படுவதுடன், அதில் 2 விசேட விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கோபுரத்தில் 50 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் 50 ஒலிபரப்பு சேவை வழங்குநர்களுக்கும் 10 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .