2024 மே 14, செவ்வாய்க்கிழமை

தொம்பேயில் சட்டவிரோத காணிக் கச்சேரி சுற்றிவளைப்பு

Kamal   / 2018 மார்ச் 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட விரோதமான முறையில் ஆவணங்களைத் தயார் செய்து சூட்சுமமான முறையில் நீண்ட நாட்களாக நடத்திவந்த காணிக் கச்சேரி அலுவலகம் ஒன்றை, தொம்பே பொலிஸார் சுற்றிளைத்தில் பெண்​ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ் அலுவலகத்திலிருந்து பெருந்தொகையான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.  காணிப் பதிவுக் காரியாலய இறப்பர் (சீல்) முத்திரை இரண்டு, தேசிய அடையாள அட்டைகள் மூன்று, போலியாகத் தயாரிக்கப்பட்ட காணி ஒப்பினை உறுதிகள், கிராமசேவகர் சான்றிதல்கள் என்பன இதன்போது, குறித்த பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 தொம்பே பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, குறித்த போலிக் காணிக் கச்சேரி அலுவலகம், சுற்றிவளைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .