2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நாய்களுக்கு ஏன் இந்தப் பாகுபாடு?’

Kogilavani   / 2017 ஜூன் 23 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முப்படைகளில் உள்ள நாய்களுக்கு மாதமொன்றுக்கு செலவிடும் தொகை, வேறுபட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண, “நாய்களுக்கு ஏன் இந்தப் பாகுபாடு?” என்றும் வினவினார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று (22) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, முப்படைகள் தொடர்பில் புத்திக எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதிலளித்திருந்தார்.

அதன் பின்னர் குறுக்குக் கேள்வியை எழுப்பிய அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். 

“ஒவ்வொரு படைகளிலும் உள்ள நாய்களைப் பராமரிப்பதற்காக மாதமொன்றுக்கு செலவிடப்படும் தொகையில் பாரிய வித்தியாசம் உள்ளது. அப்படியாயின், கடற்படை நாய்க்கு ஒரு நேரத்துக்கு அரைக் கோப்பை சாப்பாடும், தரைப்படை நாய்க்கு ஒரு நேரத்துக்கு இரண்டு கோப்பை சாப்பாடுமா வழங்கப்படுகின்றது” என்று வினவினார்.  

“இல்லையேல், ஒவ்வொரு வகையைச் சேர்ந்த நாய்கள் என்ற படியினாலா பராமரிப்புச் செலவு வித்தியாசப்படுகின்றது” என்று கேட்டார்.   

அக்கேள்விக்குப் பதிலளித்த இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, “இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து பதிலளிக்கின்றேன்” என்றார். எனினும், குறுக்கிட்ட சபாநாயகர் கருஜயசூரிய, “நாய்கள் தொடர்பில் இன்று (22) இரண்டு கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். நாய்களைப் பராமரிக்கும்போது, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றையும் பார்க்க வேண்டும்” என்று கூறி, அவையை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்த்திச் சென்றார்.   

இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் உள்ள நாய்கள் தொடர்பில் கேட்கப்பட்டிருந்த மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, “பொலிஸ் திணைக்கள நாய் பிரிவில் 177 நாய்கள் இருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து மேலும் 57 நாய்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 177 நாய்களையும் பராமரிப்பதற்கு 2016ஆம் ஆண்டு 92 மில்லியன் ரூபாய் செலவானது” என்றும் அவர் பதிலளித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .