2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’நிதி மோசடியில் ஈடுபடவில்லை என்றால் அச்சம் தேவையில்லை’

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடியில் ஈடுப்படவில்லை என்றால்,  விசேட மேல் நீதிமன்றங்கள் தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீடுகலின்றி நாட்டின் சட்டத்திட்டங்களுக்குற்பட்டே விசேட மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் மற்றும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகமே, விசேட மேல் நீதிமன்றங்களில் முதலாவதாக எந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மாத்திரம் இந்த விசேட மேல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்படும் கருத்தையும் பிரதி அமைச்சர், மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார்.

தற்போதைய தேசிய அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்மேசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .