2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க ஆதரவு வழங்கப்போவது இல்லை’

Editorial   / 2018 மே 27 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க, ஒருபோதும் ஆதரவளிக்கப்போவது இல்லை என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

"நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே முதன் முதலில் அவதானம் செலுத்தியது. எனினும் தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிந்தளவு தனது நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்துள்ளார்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், அதிகாரம் யாருக்கு செல்லும் என்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தெளிவான விளக்கம் ஒன்றை முன்வைக்கவில்லை எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .