2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நீர் மாதிரி பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும்’

Editorial   / 2020 ஜூலை 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பில் நேர்வூட் பிரதேசசபை அதிக கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள  அப்பிரதேசசபை தவிசாளர் ரவி குழந்தைவேல், அப்பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரி பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் வசிக்கும் மக்கள் தாம் அருந்தும் நீரில் பிரச்சினைகள் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் கூறினார்.

எனினும் இன்வெறி, ஹெட்லிக் ஆகிய இரு பிரதேசங்களிலிருந்தே இப்பிரதேச மக்கள் அருந்துவதற்கு நீரைப் பெற்றுக்கொள்வதாகக் கூறிய அவர், இந்த நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

நீரில் மிருகக் கழிவுகள் கலந்திருக்குமா என பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் சந்தேகிப்பதாகவும், நீர் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று(08) கிடைக்குமெனவும் இதன்பின்னரே உறுதியானத் தகவல்களை வழங்க முடியுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .