2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பதிலடி கொடுத்தது சிங்கப்பூர்

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள,  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், சிங்கப்பூரில்  தங்கியுள்ளதாகவும் அவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப, ஆக்கபூர்வமான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, சிங்கப்பூர் அரசாங்கம் நிராகரித்துள்ளது.    

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார  அமைச்சின் பேச்சாளர் ஒருவர், இது தொடர்பில், இலங்கையுடன் இணைந்து, கடந்த  ஜனவரி மாதம் முதல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால், இது  சம்பந்தமான உரிய ஆவணங்கள் எவற்றையும், இலங்கையிடம் இருந்து இதுவரை  கிடைக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார். 

உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்தால், தங்களது நாட்டின்  சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்போமென்றும் கூறியுள்ள அவர், அவ்வாறின்றி,  குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் அர்த்தமில்லை என்றும் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .