2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பரிசை காட்டி பணமோசடியில் ஈடுபட்டவர்கள் கைது

R.Maheshwary   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிசு கிடைத்திருப்பதாகத் தெரிவித்து, இணையம் ஊடாக 17,45,000 ரூபாயை மோசடி செய்த 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேலியாகொட பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, களணி பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களுள் 4 நைஜீரிய பிரஜைகள், இரண்டு பெண்கள் மற்றும் இலங்கை தம்பதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, குறித்த நைஜீரிய பிரஜைகள் தங்கியிருந்த கல்கிஸ்ஸ பிரதேச வீடொன்றிலிருந்து மடிகணினிகள் 2. வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் 79, போலி நாணயத்தாளை அச்சிட பயன்படும் கடதாசி மற்றும் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி அழைப்பு எடுப்பது போல், இலங்கையிலிருந்தவாறே இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .