2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாக். பிரதமரிடம் சிறுவன் உருக்கமான வேண்டுகோள்

Editorial   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கு இன்று (23) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

இந்நிலையில், 13 வயதான அம்மார் ரிஷாட், தனது உருக்கமான வேண்டுகோளொன்றை வீடியோ வடிவில், பாக். பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.   

கொவிட்-19 நோயால் மரணிப்போரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு, இலங்கையில் மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டு, பலவந்தமாக எரிக்கப்படுகின்றது. இது, எந்தவொரு விஞ்ஞான ரீதியிலான செயற்பாடுகளுமின்றி, இனவாத ரீதியான செயற்பாடாகும். இது எம்மை, மிக மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். . 

20 நாள்களேயான சிசுவைக் கூட, விட்டு வைக்காமல் தகனம் செய்துள்ளமை, எமக்கு வேதனை தருகிறது எனத் கூறியுள்ள அச்சிறுவன், உங்கள் வருகை, எமக்குப் புதியதோர் உத்வேகத்தைத் தந்தது. நீங்கள், உலக நாடுகளில் பலம்பொருந்திய முஸ்லிம் தலைவர் என்ற வகையில், உங்களிடம் மிகத் தயவாய்க் கேட்கின்றேன்.

உலக நாடுகள் அனைத்திலும் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 நோயால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையை, இலங்கை மட்டும் நிராகரித்துள்ளது. எனவே, இலங்கை நாட்டுடன் சிறந்த நட்புறவைக் கொண்டுள்ள நீங்கள், எமது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை, இந்த அரசாங்கத்துடன் பேசிப் பெற்றுத்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என வினயமாகக் கேட்டுள்ளான். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .