2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘பாடசாலைகளுக்கு இராணுவத்தை வழங்கவும்’

Editorial   / 2019 மே 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

பாடசாலைகளின் பாதுகாப்புக்காக முற்றுமுழுதாக இராணுவத்தை வழங்குமாறு, ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட அதிபர்க,ள் இராணுவ உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட அதிபர்களுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையில், அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நேற்று (17) நடைபெற்ற பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்றின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிபர்கள் மேலும் தெரிவிக்கையில், தற்போது மாணவர்கள் வரவு வீதம் அதிகரித்து வருவதுடன் கற்றல் நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெறுகின்றது. ஆனாலும் பாடசாலைகளுக்கான பாதுகாப்பு விடயத்தில் அனைவரும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளின் பாதுகாப்புக்காக முற்றுமுழுதாக இராணுவத்தை வழங்குவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதனை கருத்தில் கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி அருண ஜயசேகர, நாட்டில் தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை சிறப்பாக இடம்பெற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் இதற்காக இராணுவத்தின் முழுதான ஒத்துழைப்பு பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும் சந்தேகத்துக்கிடமான நபர்களோ அல்லது பொருள்களோ தென்பட்டால்,  உடன் இராணுவத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இராணுவத்தை தொடர்பு கொள்ளுவதற்கான தொலைபேசி இலக்கங்களையும் வழங்கினார். அத்தோடு பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் வரவு தொடர்பான அறிக்கையினையும் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .