2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பூஜித்தவின் மனுவை விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானம்

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமைகள் மனு அடுத்த மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை சட்டவிரோதமானதெனவும், இதனூடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தன்னை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவானது பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பி. தெஹிதெனிய, எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் குழாமால் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அடுத்த மாதம் 31ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .