2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ பெயர்ப்பட்டியல் கிடைக்கவில்லை ‘

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கைன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் இதுவரை தனக்கு கடிதம் மூலம் கிடைக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை  நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி மூலம் சபாநாயகருக்கு அறிவித்ததாகவும் எனினும், அவர்களின் பெயர் பட்டியலை கடிதம் மூலம் தருமாறு ரஞ்சன் ராமநாயக்கவிடம் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்ததாகவும் சபாநாயகர் அலுவலகம் அண்மையில் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .