2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘போராட்டத்தை கைவிட கூறவில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த போதிலும், அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடுமாறு கோரவில்லையென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மாவை எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை, அந்தக் கைதிகளைச் சந்தித்த தாம் தெரிவித்ததாகவும், இது தொடர்பான அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.  

அதன் அடுத்த கட்டமாக, எதிர்வரும் 17ஆம் திகதியன்று மாலை 5 மணிக்கு, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும், சட்டமா அதிபருடனும் பேசி முடிவை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருந்ததென்றும், ஆகையால், அவர்களிடம் தாங்கள் இந்த விடயத்தைப் ​பற்றிச் சொன்னதாகவும் கூறினார்.  

ஆனால், அந்தக் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறோ அல்லது அதைத் தொடருமா​றோ தாம் வலியுறுத்தவில்லையெனத் தெரிவித்துள்ள மாவை எம்.பி, 17ஆம் திகதி சந்திப்பு முடிந்த பின்னர், அதன்போது எடுக்கப்பட்ட முடிவுகளுடன், அடுத்த நாள் வந்து பேசுவதாக, கைதிகளிடம் தெரிவித்துவிட்டுத் திரும்பியதாகவும், அவர் மேலும் கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .