2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 21 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரக்கறிகளின் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக கடந்த 2 மாதங்களில்  இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலையம் கூறியுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 380 ரூபாயாக காணப்படுகின்றது.

கறிமிளகாய், தக்காளி, போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .